தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் செலவு இல்லாமல் மருத்துவ வசதியை வழங்கும் வகையில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 2016, ஜூன் 30-ஆம் தேதி 2020 ஆம் ஆண்டுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ காப்பீட்டு வசதியானது 2021 ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரையிலான நான்கு வருட தொகுப்பு ஆண்டிற்கு வழங்கப்படும். அரசாணையில் வகைப்படுத்தப்பட்டுள்ள 203 நோய்களுக்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். பிற ஏழு வகையான நோய்களுக்கு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
அரிதான நோய்கள் மட்டும் சிகிச்சைகளுக்கு 20 லட்சம் வரை நிதித்துறைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுமற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் மற்றும் காப்பீட்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி ஆகியோர்களை கொண்ட குழுவின் பரிந்துரையின் பெயரில் வழங்கப்படுகிறது. கண்புரை சிகிச்சைக்கு அதிக பட்சமாக ஒரு கண்ணிற்கு 30 ஆயிரம் வரையும், கர்ப்பப்பை நீக்கத்திற்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் வரையும் வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்காக மாதம்தோறும் 300 ரூபாய் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மாநில அரசு ஊழியர்களாக இருந்தால் இருவரில் யார் இளையவரோ அவரது ஊதியத்தில் மட்டும் சந்தா தொகை பிடித்தம் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது