திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் இருந்து இரண்டு நோயாளிகளை ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 108 ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது செங்கம் அருகிலுள்ள தானகவுண்டன்புதூர் அருகில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் இருந்த ஓடையில் இறங்கியது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதன்பிறகு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஓடை தண்ணீரில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.