நாட்டில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி சம்மன் நிதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு 3 தவணையாக 2000 ரூபாய் வீதம் வருடம் 6 ஆயிரம் ரூபாய் வரை வழங்குகிறது. இதில் 9 தவணையாக விவசாயிகளுக்கு மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து பத்தாவது தவணை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பலரும் பயனடைந்துள்ளனர்.
ஓய்வுக்காலத்தில் விவசாயிகளை காப்பாற்றும் விதமாக ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பெறும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. பிரதமர் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் கிடைக்கும் வகையில் முதலீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பயனடைய ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை.இந்தத் திட்டத்தில் 18 முதல் 40 வயது உடைய விவசாயிகள் ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் வரையிலான பென்ஷன் தொகையை அவர்களது 60 வயதில் பெற்றுக் கொள்ளலாம்.இந்த தொகையை பெறுவதற்கு ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை முதலீடு செய்வது கட்டாயமான ஒன்று.
இதில் 18 வயது முதல் மாதம் 20 ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்தால் அறுபது வயதிற்குப் பிறகு மாதம் தோறும் 3000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படும். 60 வயதுக்கு மேல் உயிரிழந்தால் குறிப்பிட்ட பென்ஷன் தொகையை 50 சதவீதம் அவருடைய துணைவியாருக்கு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, அடையாள அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வங்கி பாஸ் புக், மொபைல் எண், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, நில உரிமையை உறுதி செய்யும் பட்டா அல்லது சான்றிதழ்.