வெள்ளத்தை பார்க்க சென்ற நபர் ஆற்றில் தவறி விழுந்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முலைக்காவிலை கிராமத்தில் தொழிலாளியான கிருஷ்ணசாமி- வசந்தி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அபினேஷ் என்ற மகனும், மோனிஷா என்ற மகளும் இருக்கின்றனர். மார்த்தாண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. இதனால் குளித்துறை, தாமிரபரணி, முல்லை, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று கிருஷ்ணசாமி ஆற்றில் ஓடிய வெள்ளப்பெருக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கிருஷ்ணசாமி ஆற்றுக்குள் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதுக்குறித்து குளித்துறை தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் கிருஷ்ணசாமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.