Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் விழுந்த பாறைகள்…. 20 கி.மீ வேகத்தில் இயக்க வேண்டும்…. ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை…!!

தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு சேலம்-தர்மபுரி இடையில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டது.

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடகா யஷ்வந்த்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தர்மபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டி அருகில் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது பாறைகள் சரிந்து விழுந்ததில் அந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விட்டது. இதனையடுத்து மீட்பு பணி மற்றும் ரயில் தண்டவாளம் சீரமைப்பு தீவிரமாக நடைபெற்றது. அதன்பின் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அங்கிருந்து கொண்டு செல்லுதல், சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைத்தல் மற்றும் அங்கு விழுந்த பாறைகளை அகற்றுதல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதனிடையில் தென்மேற்கு ரயில்வே பொது மேலாளர் சஞ்சீவ் கிஷோர் ரயில் தடம் புரண்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைதொடர்ந்து தண்டவாளத்தில் சேதமடைந்த ஸ்லீப்பர் கட்டைகள் அகற்றப்பட்டது. அதன்பின் புதிய ஸ்லீப்பர் கட்டைகள் பொருத்தும் பணி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக பொது மேலாளர் மேற்பார்வையில் அப்பகுதியில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பின் சேலம்-தர்மபுரி இடையில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த மலைப்பாதையில் குறைந்தபட்சம் 30 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் விபத்து நடந்ததால் இந்த பகுதியில் 20 கி.மீ வேகத்தில் மட்டுமே ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 2-வது நாளாக சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

Categories

Tech |