கிணற்றுக்குள் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள நல்லவன்னிபட்டி கிராமத்தில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ராமசாமியின் விவசாய கிணற்றில் இருக்கும் மின் மோட்டார் தண்ணீரில் மூழ்கும் நிலையில் இருந்துள்ளது. இதனால் ராமசாமி கிணற்றுக்குள் இறங்கி மோட்டாரை மேலே தூக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராமசாமி கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக ராமசாமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.