Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாய்ந்து விழுந்த ஆலமரம்…. முற்றிலும் சேதமடைந்த வீடு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

ஆலமரம் சாய்ந்து விழுந்ததால் வீடு முற்றிலும் சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள கீழமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மாரியம்மாள் வீட்டின் அருகில் இருக்கும் ஆலமரம் சாய்ந்து விழுந்தது. இதனால் வீடு முற்றிலும் சேதமடைந்து விட்டது.

ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பாண்டியன் மற்றும் மாரியம்மாள் ஆகியோர் உயிர் தப்பி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு ஆல மரத்தை வெட்டி அகற்றி விட்டனர்.

Categories

Tech |