அமெரிக்காவில் ஒரு உணவகத்திற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியதால் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இருக்கும் மான்ஹாட்டன் என்ற நகரத்தில் இருக்கும் உணவகம் ஒன்றிற்குள் புகுந்த இளைஞர், “அல்லாஹு அக்பர், இன்னும் இரண்டே நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது, நீங்கள் அனைவரும் என்னோடு சேர்ந்து சாகப் போகிறீர்கள்” என்று கத்தியிருக்கிறார். இதனால், பயத்தில் அங்கிருந்த பெண்கள் சாப்பாட்டை வைத்து விட்டு பதறிக் கொண்டு ஓடி இருக்கிறார்கள்.
இதை பார்த்த ஒரு நபர், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். எனினும் காவல்துறையினர் அந்த இடத்திற்கு வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். இதுதொடர்பான ஒரு வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன்பின் அந்த நபர் காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டார்.
Malik Sanchez என்ற அந்த 19 வயது நபர் யூடியூபர் என்றும் இவ்வாறான வீடியோக்களை அவர் இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார் என்பதும் தெரியவந்தது. எனினும் அவர் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களை ஓட செய்ததாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அடுத்த பிப்ரவரி மாதம் அவரின் தண்டனை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.