சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று தெய்வீக சிந்தனைகள் அதிகரிப்பதன் காரணமாக குடும்பத்தோடு வேண்டுதல்களை நிறைவேற்ற முயல்வீர்கள். வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கக் கூடும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கமும் அதிகரிக்கும். ஆனால் மனதில் மட்டும் ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும். அதை நீங்கள் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும்.
உறவினர் வருகை இருக்கும். உறவினர் நண்பர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். ஆன்மிக நாட்டமும் அதிகரிக்கும். இன்றைக்கு வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். இன்று தனவரவுக்காக கொஞ்சம் காலதாமதம் தான் பிடிக்கும். அதற்கு ஏற்றார் போல் இன்று திட்டங்களை தீட்டி செயல்படுங்கள். இன்று வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்