Categories
உலக செய்திகள்

“மிக்சிகனில் விபத்துக்குள்ளான விமானம்!”.. 4 பயணிகள் பலியான பரிதாபம்..!!

மிச்சிகனில் இருக்கும் பீவர் தீவில் விமான விபத்து ஏற்பட்டதில் 4 பயணிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிச்சிகனின் உள்ள மேக்கினாவ் என்ற நகரத்திற்கு மேற்கில் இருக்கும் பீவர் தீவின் விமான நிலையத்தில் இரண்டு எஞ்சின்கள் உடைய ஒரு விமானம் திடீரென்று விபத்துக்குள்ளானது. இந்த  விமானத்தில் 5 பயணிகள் இருந்துள்ளனர். இதில் 4 நபர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விமானத்தில் பயணித்த பயணிகள் தொடர்பான அடையாளங்கள் தற்போது தெரிவிக்கப்படவில்லை என்று கிரேட் லேக்ஸ் பிராந்திய கடலோர காவல் படையினர் கூறியிருக்கிறார்கள். இந்த விமான விபத்து தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |