Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டரில் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’… வெளியான புதிய தகவல்…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி படம் தியேட்டரில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி. காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த மணிகண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நல்லாண்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

 

The first look of Vijay Sethupathi's 'Kadaisi Vivasayi' unveiled! | Tamil  Movie News - Times of India

கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகாமல் இருந்தது. மேலும் இந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் கடைசி விவசாயி திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |