அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories