Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “வேலை கிடைக்கும்”… கல்வியில் இருந்த பிரச்சினைகள் தீரும்..!!

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று சந்தோச அனுபவங்கள் கூடும் நாளாக இருக்கும். குழந்தைகளின் திறமையை கண்டு மகிழ்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் திருப்தியை கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த பிரச்சினைகள் தீரும். முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த காரியங்கள் நல்ல முடிவை கொடுக்கும்.

இன்று புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வரவேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவுகளை இன்று நீங்கள் எடுப்பீர்கள். நினைத்தபடி பணவரவையும் பெறக்கூடும். இன்று உறவினர் வகையிலும் உதவிகள் கிடைக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு உகந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். உங்களுக்கு அனைத்தும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை :  கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |