Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலையே முழுசா முடியல… அதுல நாங்க முறைகேடு பண்ணோமா…? என்ன நியாயம் இது… வைகைச்செல்வன் பதில்…!!!

ஹலோ எஃப்எம்-இல் இன்று காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகும் ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். அதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சென்னையில் கனமழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் எடுக்க தவறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டுவது முற்றிலும் பொய்.

அந்த பணிகள் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் தாங்கள் ஆட்சியில் 30 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றது. பணிகள் முழுமையாக முடியாத நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதால் திமுக அரசுதான் தற்போது அந்த மேற்கொண்டு இருக்க வேண்டும். பணிகள் நிறைவடையும் முன்பாக தன் தோல்வியை மறைக்க முதல்வர் இவ்வாறு பேசுவதாக அவர் தெரிவித்தார். மேலும் அதிமுக இரட்டை தலைமையில் ஏற்பட்டுள்ள புகைச்சல் மற்றும் சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளித்ததாவது இரு பெரும் தலைவர்கள் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளை இருவரும் தனித்தனியாக ஆய்வு செய்வதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார். மேலும் சசிகலா குறித்து கூறுகையில் அதிமுக தொண்டர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அதிமுகவில் எந்த குழப்பத்தையும் அவரால் ஏற்படுத்த முடியாது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு வைகைச்செல்வன் பதில் அளித்துள்ளார்.

Categories

Tech |