Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனைவி-மகனை இழந்த நபர்…. சாலையில் நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி-மகனை இழந்து பலவருடங்களாக விரக்தியில் இருந்த நபர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புங்கம்பட்டி கிராமத்தில் கூலித் தொழிலாளியான ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு தனது மனைவி சங்கீதா மற்றும் மகன் ஸ்ரீதர்ஜோஸுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர்கள் வெள்ளேரி கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் அவரது மனைவி சங்கீதா உயிரிழந்துவிட்டார். மேலும் ஸ்டீபனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ராடு பொருத்தப்பட்டிருந்தது.

இதனால் விரக்தியடைந்த ஸ்டீபன் உணவில் நஞ்சு கலந்து தனது மகனுக்கும் கொடுத்துவிட்டு தானும் அதை சாப்பிட்டுள்ளார். அதில் குழந்தை ஸ்ரீதர்ஜோஸ் உயிரிழந்துவிட்டான். அதன்பின் ஸ்டீபன் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். இதனையடுத்து மனைவி மற்றும் மகனை இழந்த விரக்தியில் இருந்த ஸ்டீபன் திடீரென ஏரிக்குப்பம் செல்லும் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டார். அச்சமயம் அவ்வழியாக ஆள் நடமாட்டம் இல்லாததால் அவரை காப்பாற்ற இயலவில்லை.

இதனால் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே ஸ்டீபன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்டீபனின் தாயார் புனிதா ஆரணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்டீபனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |