Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

3-ஆவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கீழே தவறி விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசோக்குமார் மீனா என்பவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அரக்கோணம் ரயில்வே இன்ஜினியரிங் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி ரீனா மீனா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பின்னர் அசோக்குமார் மீனா தனது குடும்பத்தினருடன் அரக்கோணம் காந்திநகர் பகுதியில் இருக்கும் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ரீனா மீனா தனது வீட்டின் மூன்றாவது மாடியில் துணிகளை காய வைத்துக் கொண்டிருக்கும் போது அவரின் மகளான ராகினி மீனா அருகில் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென நிலைதடுமாறி மாடியிலிருந்து தவறி கீழே சாலையில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அதன்பின் குழந்தை கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரீனா மீனா மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் குழந்தை மற்றும் தாய் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்களால் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் சுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் மற்றும் துணை தாசில்தார் சரஸ்வதி அங்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |