Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. என்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டிட பொறியாளரான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ராமகிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

மேலும் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 10-ஆம் தேதி கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு ராமகிருஷ்ணன் வெளியே சென்றுள்ளார். ஆனால் ராமகிருஷ்ணன், மனைவி மற்றும் குழந்தையை பார்க்க செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ராமகிருஷ்ணன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் முன்பு திடீரென விஷம் அருந்தி விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |