Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுவா மூட்டையில் இருக்கு…? சோதனையில் சிக்கிய பொருள்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயற்சி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் நம்பியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ஒரு சரக்கு வேனில் சிலர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்றபோது அவர்கள் தப்பி ஓடினர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் சரக்கு வேனில் இருந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கபட்டது.

ஆகவே மர்ம நபர்கள் சிலர் சரக்கு வேனில் ரேஷன் அரிசியை கடத்த முயன்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் வேன், அரிசி மற்றும் தப்பி ஓடியவர்கள் விட்டுச்சென்ற செல்போன் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |