Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு… “சிறு விஷயத்திற்கும் கோபம் வரும்”… நிதானமாகப் பேசுங்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்றைய செயல்பாடுகள் அனைத்திலும் தொய்வு ஏற்படும். எதிர்பார்த்த அரசு உதவிகள் மற்றும் வங்கி கடன்கள் மிகுந்த பிரயாசத்திற்குப் பிறகே நடக்கும். குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் கொஞ்சம் ஏற்படலாம். இன்று சிறு விஷயத்திற்கு கூட கோபம் வரும் பார்த்துக்கொள்ளுங்கள். எப்பொழுதுமே கோபத்தை மட்டும் கட்டுப்படுத்தி விடுங்கள். திடீர் பணத் தேவை கொஞ்சம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணியை செய்யும்படி இருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்கப் பெறலாம். இன்று உறவினர் மூலம் நன்மை உண்டாகும். இன்று வாகன பழுது கொஞ்சம் இருக்கும். அது மட்டுமில்லாமல் வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.

வெளியூர் பயணம் சிறுசிறு தொல்லைகள் கொடுக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணி மேற்கொள்ள இருக்கும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் ன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |