துணி மூட்டைகள் எடுத்து செல்வது போல் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதை வருவாய்த்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் கடத்தப்பட்டு வருகின்றது. இதனால் இம்மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி பகுதியிலிருந்து வெளிமாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக புகார் வந்துள்ளது.
இதனை அடுத்து ரயில்வே நிலையத்தின் உள்ளே சோதனை செய்ததில் துணி மூட்டைகளை கொண்டு செல்வதை போல் ரேசன் கடையின் அரிசியை வெளிமாநிலங்களுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் வருவாய்த் துறையினர் அங்கு வருவதை அறிந்த கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.