தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தினால் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியே வருகின்றது. இதனால் இம்மாவட்டத்தின் அருகாமையில் இருக்கும் மாடப்பள்ளி உள்பட 4 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர் இம்மாவட்டத்தின் பெரிய ஏரியாக இருக்கும் திருப்பத்தூர் ஏரிக்கு வருகின்றது.
இதன் காரணத்தினால் பத்து வருடங்களுக்குப் பிறகு திருப்பத்தூரின் பெரிய ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.