Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானிற்கு செல்லும் இந்திய லாரிகள்!”.. எல்லையில் அனுமதிப்பது தொடர்பில் பரிசீலனை செய்யப்படும்.. -பாகிஸ்தான் அதிபர்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் அளிக்க இந்தியா அனுப்பிய லாரிகளை பாகிஸ்தான் எல்லையில் அனுமதிக்க பரிசீலிக்கப்படும் என்று அதிபர் இம்ரான்கான் கூறியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அங்கு உணவு தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டிருக்கிறது. எனவே ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய இந்தியா தீர்மானித்திருக்கிறது. அதன்படி லாரிகளில் 50,000 டன் கோதுமையை ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அனுப்ப இந்தியா தயாராக இருக்கிறது.

இந்த லாரிகள் பாகிஸ்தான் நாட்டின் வழியே தான் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு செல்ல முடியும். ஆனால், பாகிஸ்தான் அரசு இந்தியாவின் லாரிகள் தங்கள் நாட்டின் எல்லைப்பகுதிக்குள் நுழைவதற்கு தடை விதித்திருக்கிறது. இதனால், இந்தியா, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரியான அமீர்கான் முத்தாகி, பாகிஸ்தானிற்கு சென்று அதிபர் இம்ரான் கானை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, அதிபர் இம்ரான்கான், இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்படும் கோதுமை லாரிகளை தங்கள் எல்லைப்பகுதிக்குள் அனுமதிப்பது தொடர்பில் சுமுகமான தீர்வு மேற்கொள்வதற்கு அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |