பாலாற்றில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள மாதனூர் ஊராட்சியில் பல கிராமங்களின் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த குப்பைகளை தூய்மை பணியாளர்கள் வண்டிகள் மூலமாக கொண்டு வந்து பாலாற்றில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.
இதன் காரணத்தினால் பாலாறும் மாசுபடும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து குப்பைகளை பாலாற்றில் கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.