Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “திட்டமிட்டு செயல்படுவது நல்லது”… காரிய தடைகள் விலகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று இட மாற்றங்கள் போன்றவை ஏற்படக்கூடும்.. பெண்களால் ஏற்படும் வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் பணமுடை ஏற்படலாம். சரியான பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்குங்கள். தேவையில்லாத பொருட்களை தயவுசெய்து வாங்க வேண்டாம். கோபத்தைக் குறைத்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இன்று கோபத்தை கட்டுப் படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மையை கொடுக்கும். வீண் செலவைத் தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்துதான் தான் செல்ல வேண்டும்.

மிகவும் பொறுமையுடனும் கவனமாகவும் பாடங்களை படிப்பது அவசியம். பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கக்கூடிய மனநிலை இருக்கும். காரிய தடைகள் விலகி செல்லும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். இன்று உறவினர் வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் ஓரளவுக்கு நிம்மதியாகவே காணப்படும்.

அதுமட்டுமில்லாமல் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் நிதானம் வேண்டும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு சென்றால் மிக சிறப்பாக இருக்கும். மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |