Categories
மாநில செய்திகள்

மழைக்காலத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்…. அரசு வெளியீடு….!!!

மழைக்காலங்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், மழை வெள்ள காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 20 நொடிகள் முறையாக சோப்பு பயன்படுத்திய கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து அதன் பிறகு ஆறவைத்து குடிக்க வேண்டும். பழைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து, சமைத்தவுடன் உறவினை சூடாக சாப்பிடுவது நல்லது. திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொது கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டும். வெள்ள நீரில் நனைந்த உணவுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

மேலும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சைப் பெற வேண்டும். வீட்டில் சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது. வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு, சர்க்கரை கரைசல் மற்றும் வீட்டில் உள்ள நீராதாரங்களை அடிக்கடி பருக வேண்டும். உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.வீட்டில் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று வகை பிரித்து தினமும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இடம் வழங்க வேண்டும். குப்பைகளை அப்படியே சேர்த்து வைத்தால் அதில் இருந்து வரும் ஈ, கொசுக்கள் மூலம் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Categories

Tech |