இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக் வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக சாதாரண இரு சக்கர வாகனங்கள் இனி வேண்டாம் என்று பலரும் நினைக்கின்றனர்.அதற்கு பதிலாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி பயன்படுத்தலாம் என்று கருதுகிறார்கள். இதன் விலையும் மிக குறைவுதான். சுற்றுச்சூழல் மாசுபாடு இருக்காது. பராமரிப்பு செலவும் குறைவு. அப்படி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்களுக்கு தற்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. 50 ஆயிரம் அல்லது ஒரு லட்சம் கொடுத்து பைக் வாங்க முடியாது என்று நினைப்பவர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெறும் 499 ரூபாய் கொடுத்து அட்டகாசமான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க முடியும். பூம் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது கார்பெட் எலக்ட்ரானிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதன் ஆரம்ப விலை ரூ.89,999. ஆனால் முன்பணமாக 499 ரூபாய் செலுத்தினால் மட்டும் போதும். வண்டியை வாங்கி செல்லலாம். அடுத்த ஒவ்வொரு மாதமும் நீங்கள் 1,699 ரூபாய் இஎம்ஐ செலுத்தினால் போதும்.
இந்த ஆண்டு வரை இஎம்ஐ செலுத்தும் வசதி உள்ளது. இந்தியாவிலேயே 5 ஆண்டுகள் இஎம்ஐ வசதி வழங்கும் முதல் நிறுவனம் இதுதான். நீங்கள் இதற்கு ஒருமுறை மட்டும் சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை ஓடும் திறன் கொண்டது. இரண்டு பேட்டரிகள் பொருத்தும் வசதியும் உள்ளது.கார்பெட் 14 மற்றும் கார்பெட் 14-EX என இரண்டு மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளன. கார்பெட் 14-EX ஸ்கூட்டரின் விலை ரூ.1,24,999.