கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலபேரி பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் உதயநேரி கட்டளை பெருமாள் கோவில் பகுதியில் வசிக்கும் பகவதிராஜா, முப்புடாதி என்பதும் இவர்கள் 2 பேரும் சண்முகாபுரம் கருப்பசாமி கோவில் பின்புறம் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்கள் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.