ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சுரண்டை ஆலங்குளம் மெயின் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை வழிமறித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் லோடு ஆட்டோவில் 45 மூட்டைகளில் 2250 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது காவல்துறையினக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் டிரைவர் ஆனந்தராஜ் மற்றும் பனையடிபட்டி பகுதியில் வசிக்கும் மாரி செல்வன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 போரையும் கைது செய்ததோடு ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.