பொருட்கள் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தொல்காப்பியர் சதுக்கம் அண்ணா காலனியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்று வைத்துள்ளார். இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் தாமரைச்செல்வி மளிகை கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்து வந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் 2 நபர்கள் கடைக்கு வந்தனர். இதனையடுத்து அவர்கள் பொருட்கள் கேட்பது போல் நடித்து தாமரைச்செல்வியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை திடீரென்று பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.