Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கிருந்த மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றும், நாளையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை ஒருநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |