Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய வாகனம்… பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… வாலிபர் கைது…!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள காளிசெட்டிப்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் தனது மனைவி மகேஸ்வரி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகேஸ்வரியும் கூலித்தொழில் செய்து வரும் நிலையில் பீமநாயக்கனூர் பகுதியில் ஒரு தோட்டத்தில் வேலை செய்துவிட்டு தனது உறவினர் பிரகாஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது பீமநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி உள்ளது.

இதில் பின்னால் அமர்ந்திருந்த மகேஸ்வரி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மகேஸ்வரியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இருசக்கர வாகனம் ஓட்டிய பிரகாஷ் என்ற வாலிபரை கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |