மகள் பள்ளிக்கு செள்ளததல் மனமுடைந்த தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள கணபதி பாளையம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். டிரைவரான இவருக்கு தெய்வானை என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இவர்களது 2வது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளார். இதனையடுத்து மகளை பள்ளிக்கு செல்லும்படி தெய்வானை கூறி வந்துள்ளார். இருப்பினும் மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து மகளின் படிப்பை எண்ணி மனமுடைந்த தெய்வானை விரக்தியடைந்து வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக தெய்வானையை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெய்வானை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பள்ளிபாளையம் காவல்துறையினர் தேவானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.