Categories
மாநில செய்திகள்

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்”…. முதல்வர் ரங்கசாமி கோரிக்கை….!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். இவரின் நீண்ட நாள் கோரிக்கையான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மேலும்  புதுச்சேரி மாநில நிதி நிலைக்கு 1.5% கூடுதல் நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்குகிறது.

எனவே  குறைந்தபட்சம் 1,500 கோடி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.மேலும் புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ரூ.500 கோடி வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை ரங்கசாமி மத்திய அரசிடம் வைத்துள்ளார்.

Categories

Tech |