செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, இன்றைக்கு சொல்லுகின்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் சொன்னதெல்லாம் பொய். இது போதும் கிரிமினல் கேஸ் பதிவு செய்வதற்கு, இந்த மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு… அவர் கொடுத்திருக்கிற பேச்சு அந்த எவிடன்ஸ் போதும், எதுவும் தேட வேண்டியதில்லை, கைது பண்ணி உள்ளே அனுப்புங்க, ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.?
மக்கள் வந்து கேட்கிறார்கள்… ஐயா எங்களுக்கு சாப்பாடு வேண்டாம், ஒவ்வொரு தடவையும் அங்கங்க சாப்பாடு ஓபன் பண்ணி விட்டு அந்த சாதத்தை அள்ளிக் கொடுக்கிறது. கஜா புயலுக்கு நான் கூட 2 லோடு அனுப்பினேன்.அதிமுகவை நீங்கள் மறந்து விடுங்கள், இந்தத் தலைமை தொடர்கிற வரை இனி அதிமுக ஜெயிக்கும் என்றெல்லாம் நினைக்கவே நினைக்காதீர்கள்.
நான் இந்த சேலத்தில் உட்கார்ந்து சொல்கிறேன், சேலமும் ஜீரோ ஆகப்போகிறது, கோயமுத்தூர் சிரமப்படுகிரார்களா ? இல்லையா என்று பாருங்கள். ஜனங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் மீடியா புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அப்போது பேசினது எல்லாம்… தேர்தல் நேரத்தில் பேசினது எல்லாம் போட்டு இருக்காங்க.
வலைதளங்களில் நீங்களா நானா போட்டுக் கொண்டிருக்கிறோம். மீடியா ஸ்டார்ட் பண்ணி எல்லாத்தையும் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும். எங்கெங்க வடிநீர் போகுதோ அந்த கால்வாய் 954 அவர் எனக்கு காட்டட்டும், எந்த இன்ஜினியர் வேணாலும் வரட்டும், பழைய மாநகராட்சி கமிஷனர் வரட்டும் என கடுமையாக விமர்சித்தார்.