ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் தங்களது முடிவினை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்கள் தங்களது முடிவினை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் ஒரே மாதிரியான விதிகளை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் போது நாட்டிற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று மெர்க்கல் கூறியுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் அடுத்த வாரம் மத்திய அரசும், 16 மாநிலங்களின் கூட்டாட்சி அரசாங்க தலைவர்களும் இணைந்து கடுமையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஜெர்மன் ராணுவத்தினர் 12 ஆயிரம் வீரர்களை சுகாதார சேவைகளுக்கு உதவுவதற்காக வருகின்ற கிறிஸ்துமஸ்க்குள் அணிதிரட்ட தயாராகி வருவதாக பிரபல செய்தித்தாள் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் 630 ராணுவவீரர்கள் சுகாதார சேவைகளுக்கு உதவுவதற்காக இதுவரை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.