உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ஒரு ‘யோக்கிய சர்க்கார்’ தேவை, யோகி சர்க்கார் அல்ல என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் சாடியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: “பாஜக அழிவு அரசியல் செய்கிறது. வளர்ச்சி அல்ல. மக்களை ஏமாற்றி நம்ப வைத்து விட்டு ஒரு வியாபாரியை அவர்கள் கொன்ற விதம் மாவட்டத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது. உத்திரபிரதேச முதல்வர் மீது வழக்குகள் உள்ளன.
லேப்டாப், இன்டர்நெட் இயக்கத் தெரியதாவர் இன்றைய முதல்வர். உத்தர பிரதேச முதல்வரால் லேப்டாப் கூட இயக்க முடியாது. அவருக்கு போனை கூட பிறர் உதவி இல்லாமல் இயக்கத் தெரியாது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ஒரு ‘யோக்கிய சர்க்கார்’ தேவை, யோகி சர்க்கார் அல்ல என்று கடுமையாக சாடியுள்ளார்.