Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மாற்று மின்சக்தி உற்பத்திக்கு ரூ.700 கோடி முதலீடு

இந்தியாவில் மாற்று மின்சக்தி உற்பத்திக்காக அடுத்தாண்டில் 700 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யவுள்ளதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மாற்று மின்சக்தி உற்பத்திக்காக சுமார் 717 கோடி ரூபாய் அளவிலான முதலீடு திட்டங்கள் வரும் ஆண்டில் செயல்படுத்தப்படும் எனச் சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த வங்கியின் தலைமை இயக்குனர் பாங்க் ஈ இயன் கூறியதாவது, ‘இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கத்தில் மாற்று மின்சக்தி உற்பத்திக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளோம். இதற்காக சுமார் 717 கோடி ரூபாய் அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘இந்தியாவில் சாலை, கிராமப்புற போக்குவரத்து, குடிநீர் விநியோகம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ஏற்கனவே பல திட்டங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போது அத்தியாவசிய தேவையாக மின்சக்தி உள்ளது. எனவே வரும் ஆண்டில் மேற்கண்ட நிதியுதவி கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது..

இந்திய அரசின் உதவியுடன் தனியார் முதலீட்டில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்’ எனத் தெரிவித்த பாங்க் ஈ இயன் இந்தியச் சந்தை மிகவும் துடிப்புமிக்கது எனப் பாராட்டினார்.

Categories

Tech |