கார்த்தியின் கைதி படத்தின் 2-ஆம் பாகம் விரைவில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைதி படம் 2019ல் ரிலீசாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் வருகிறது. ஜப்பானிலும் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து கைதி 2-ஆம் பாகம் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் வலை தளத்தில் ஆர்வத்தை பதிவிட்டு வருகிறார்கள்.
கைதி 2- ஆம் பாகத்துக்கான பெரும்பகுதி காட்சிகளை முதல் பாகம் எடுக்கும் போதே படம் ஆக்கிவிட்டதாகவும், 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது எனவும், லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். கார்த்தி விருமன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்ததும் இருவரும் கைதி 2-ஆம் பாகத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.