Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஜேம்ஸ்பாண்ட் கெட்டப்பில் வராரு… ஒருவேளை சினிமாவில் நடிக்கிறாரோ?

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்ததாக முதலமைச்சர் சொல்கிறார். அந்தத் திட்டம்  மாநில அரசோடு  நிற்பது கிடையாது. மத்தியஅரசில் இருந்து ஒரு குழு வருகிறது. அந்த குழு பார்வையிட்டு, அதில் செய்திருக்கின்ற வேலையை சரியாக தான் செய்திருக்கிறார்களா ? சரியான அளவில் செய்திருக்கிறார்களா ? என்பதை பார்த்து தொழில்நுட்ப வல்லுநர்கள் சொன்ன பிறகுதான் நிதி ஒதுக்கீடு செய்வார்கள்.

இருந்தபோதிலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கீங்க. ஊழல் இருந்தால் கண்டுபிடிக்க சொல்லுங்க. சும்மா பொத்தாம் பொதுவா சொல்லிட்டு போறது தன்னுடைய பணியை வந்து தட்டி கழிப்பது சரி இல்லை. இவர்கள் விழித்துக் கொண்டிருக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு முன்பாகவே இந்த அரசு முழுக்க முழுக்க விளம்பரம் தேடுவது தான் இருந்தது. முதல் அமைச்சர் பார்த்தால் ஜேம்ஸ்பாண்ட் மாதிரி வருகிறார் டிரஸ் போட்டு வருகிறார். ஒரு தடவை வேஷ்டி சட்டையில் வருகிறார். ஒரு தடவை பேண்ட் சட்டையில் வருகிறார். இப்போ மக்களெல்லாம் பார்க்கிறார்கள்.

நம் முதல்வர் நடிக்கிறாரோ…  அவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறாறா என்ற சூட்டிங் பார்க்கிற மாதிரி தான் மக்கள் பார்ப்பார்களே ஒழிய … ஒரு முதலமைச்சராக மக்கள் பார்க்கவில்லை. இரண்டு மாதத்திற்கு முன்பாகவே விழித்து, எங்களுடைய அரசு மாண்புமிகு எடப்பாடியார்காலத்திலும் சரி… அம்மா காலத்திலும் சரி… இரண்டு மாதத்திற்கு முன்பாகவே இந்த மழை வருவதற்கு முன்பாகவே எந்தெந்த பகுதிகளில் தூர்வார வேண்டும் ? எந்தெந்த பகுதியில் மழை நீர் தேங்கும், எந்தெந்த  பகுதியில் அதிக மழை நீர் வரும் என்பதை எல்லாம் அறிந்து அதற்கான பொறியாளர்களை போட்டு இருந்தோம் என தெரிவித்தார்.

Categories

Tech |