Categories
மாநில செய்திகள்

திமுக அரசு சரியா செஞ்சுட்டு இருக்கு…! இல்லைனா பெரிய சேதம் ஆகியிருக்கும்… முக.ஸ்டாலின் விளக்கம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இதனை அரசியலாக்க விரும்பவில்லை. மேட்டூர் அணையை திறந்துவிட்ட போது கூட, அதை திறப்பதற்கு முன்னாடி முழுவதுமாக டெல்டா பகுதியில் தூர்வார வேண்டும் என்று சொல்லி உத்தரவிட்டு அந்த பணி நடந்தது உங்களுக்கு நன்றாக தெரியும். இன்னும் மற்ற பகுதியில் இருக்கக்கூடிய ஆறுகள், ஏரிகள், குளங்கள் எல்லாம் கூட  தூர்வார முயற்சியில் ஈடுபட்டோம்.

நீங்கள் கேட்டது மாதிரி பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதிமுக ஆட்சியில் தூர்வாருனோம் என்று கணக்கு காட்டினார்களே தவிர… அதன் மூலம் கமிஷன் வாங்கினார்களே தவிர…  முறையான அந்த பயணி செய்யவில்லை என்பது உறுதி, இருந்தாலும் அதற்கென்று ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டு நிச்சயமாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னியாகுமரி யில் அமைச்சர் மனோ தங்கராஜ் பணிகளை  செய்து கொண்டிருக்கிறார். மேலும் அடுத்து கே.கே.எஸ்.ஆர்,  பெரியகருப்பன் உள்ளிட்ட அமைச்சர்களும் உடனடியாக அங்கு சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்த சொல்லி அனுப்பி வைத்திருக்கிறோம்.ஏற்கனவே நடவடிக்கை எடுத்ததனால் தான் டெல்டா பகுதியில் சேதம் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. இல்லன்னா பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும் என தெரிவித்தார்.

Categories

Tech |