Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக செய்யல…! ”நாங்க தான் செஞ்சோம்”…. சென்னை தப்பியது எங்களால் தான்… கெத்தாக பேசிய ஜெயக்குமார்…!!

கடந்த அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான் தற்போது பெய்து வரும் பெரும் மழையிலிருந்து சென்னை தப்பியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், எங்களை பொறுத்தவரை 2015-ஆம் ஆண்டு பெரு வெள்ளம் ஏற்பட்டது. அப்போது 28 செ.மீ மழை பெய்தது. இப்போது 21 செ. மீதான் மழை பெய்திருக்கிறது. 28 செ.மீ மழை பெய்தத அடிப்படையில் அனுபவங்களைக் கொண்டு அடையாறு, பக்கிங்கம் கனலகேனல், கேப்டன் கேனல், கூவம் இவையெல்லாம் ஆகாயத்தாமரை இல்லாமல் பெரிய அளவில் வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்களைக் கொண்டு வந்து தூர்வாரி நாங்கள் சரியாக வைத்திருந்தோம்.

அனைத்து மழைநீர் கால்வாய்களில் தூர்வாரப்பட்டது. நாங்கள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக தான் சென்னை இன்று தப்பியது. இல்லையென்றால் இன்னும் மோசமான நிலைக்கு போயிருக்கும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |