Categories
மாநில செய்திகள்

நேரில் ஆய்வு செய்த ஸ்டாலின்…! நலத்திட்ட உதவிகளும் வழங்கி… செம்மையான நடவடிக்கை …!!

தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது பொது மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். கடந்த 7ஆம் தேதி முதல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து மழை நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். அந்தவகையில் திருவிக நகர் தொகுதியில் இன்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அமைச்சர்கள் எ.வா வேலு, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல் கொளத்தூர் தொகுதியிலும் முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . முன்னதாக வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட லக்மா நகரில் கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமையும் முதலமைச்சர் முக. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Categories

Tech |