உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் .
‘டாப்-8 ‘வீராங்கனைகள் மட்டும் பங்குபெறும் டபிள்யூ.டி.ஏ. என அழைக்கப்படும் உலக மகளிர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட 8 வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறுவர் .அதன்படி நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பாலா படோசா 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.