அதிமுக தூர்வாரியதன் காரணமாகத்தான் சென்னை தப்பியது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவிக நகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தா.ர் அதன் பின்பு மக்களுக்கு நிவாரண பொருட்களான அரிசி, பால், பிரட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: “கடந்த ஆட்சியில் அதிமுக அரசு தூர்வாரியதால் தான் சென்னை கனமழையில் இருந்து தற்போது தப்பியது. இல்லை எனில் இன்னும் மோசமான நிலைக்கு சென்று இருக்கும்.
வடிகால் மற்றும் வரத்துக் வாய்க்கால்களை திமுக அரசு முறையாக கவனிக்கவில்லை. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. கண்துடைப்புக்காக ஒரு சில இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. திமுக அரசு மெத்தன போக்காக உள்ளது. எப்பொழுதும் அதிமுகவை குறை சொல்வது மட்டுமே திமுகவின் வேலையாக உள்ளது” என்று அவர் விமர்சித்துள்ளார்.