Categories
மாநில செய்திகள்

ALERT: 20 மாவட்டங்களுக்கான எச்சரிக்கை… வெளியான தகவல்…!!!!

வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 18ஆம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்றும், 16 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பகுதிகளில் நாளை மறுதினம் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மோசமடைந்தது. தற்போது தான் தண்ணீர் படிப்படியாக வெளியேற்றப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டு உள்ளனர். இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீண்டும் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |