அம்மா உணவகத்தில் இன்று முதல் மீண்டும் உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் பருவமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்த கன மழையால் முக்கிய பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனால் பருவமழை முடியும்வரை அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், தற்போது மழை வெள்ள பாதிப்புகள் குறைந்ததால் அம்மா உணவகத்தில் இன்றுமுதல் உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.