Categories
அரசியல் மாநில செய்திகள்

“தனித்தனியா ஆய்வு செஞ்சா… தனியா செயல்படுகிறோம் என்று அர்த்தமா”…? ஓ பன்னீர்செல்வம் விளக்கம்..!!!

தனித்தனியாக ஆய்வு செய்தால் தனியாக செயல்படுகிறார்கள் என்று கூறுவது ஏற்புடையது கிடையாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். அந்த வகையில் மூன்றாவது நாளாக நேற்று தியாகராய நகர் சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து நிபுணர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாகவும், அதிக காற்று காரணமாகவும் மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்துள்ளது.

பொதுமக்கள் பெரும் துயரத்தை அடைந்துள்ளனர். தமிழக அரசு இதில் தனிக்கவனம் செலுத்தி அவர்களை காக்க வேண்டும். அவர்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும். நானும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக நிவாரணம் வழங்குவது குறித்து பலரும் விமர்சனம் செய்துவருகின்றனர். எங்களுக்குள் எந்த பாகுபாடும் கிடையாது. தனித்தனியாக ஆய்வு செய்தால் தனியாக செயல்படுகிறார்கள் என்று கூறுவது ஏற்புடையது கிடையாது. இதனை விமர்சிப்பது பார்வையில் தான் தவறு உள்ளது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |