Categories
தேசிய செய்திகள்

BREAKING: மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?…. அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக புகைமூட்டம் நிலவுகிறது.

இந்நிலையில் காற்று மாசை குறைக்க டெல்லியில் போக்குவரத்துக்கு 3 நாள் ஏன் தடை விதிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.டெல்லியில் முழு முடக்கத்தை அமல்படுத்தவும் தயாராக இருக்கிறோம் என்று உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு பதில் அளித்துள்ளது. அதனால் விரைவில் டெல்லியில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |