தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத்தேர்வாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தனியார் பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்திருந்தன. அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தேர்வுகளை நேரடியாக நடத்துவதே உகந்ததாக இருக்கும் என்று துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதனைப் போல நேரடி தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.பாடங்களை ஆன்லைனில் நடத்திவிட்டு தேர்வை மட்டும் நேரடியாக எழுதச் சொல்வது ஏன் என்று மாணவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.