தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் . இது மேலும் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகின்ற 17 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
அதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல்,மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.